Wednesday, 28 February 2018

ஓம் நமசிவய - சிவவாக்கியர் சொல்லும் அர்த்தம் தான் என்ன..? பாடல் விளக்கம்

பாடல்

அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே.

பாடல் விளக்கம் 

மிகவும் அரியதான நமசிவய என்ற அஞ்செழுத்தே
ஆதியும் அந்தமுமாக ஆகியுள்ளது. அடுத்து எண்சாண்
ஊடம்பைப் பெற்ற அரிய பிறவியை அடைந்த மனிதர்களும்
முப்பத்து முக்கோடி தேவர்களும் அன்றும் இன்றும் என்றும் 
ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்துரைத்த மந்திரம்
“ஓம் நமசிவய” என்பதே. அதுவே அனைத்தும் அடங்கிய ஓரெழுத்தானதையும்
என் உயிரில் வாலையாக விளங்குவதையும் உணர்ந்து அந்த ஓர் எழுத்தைத் தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து
இதனை அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே ஈசனைத்
தியானித்து இந்த சிவவாக்கியம் என்ற நூலைச் சொல்லுகின்றேன். இதனைப்
படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும் பற்றிய பாவவினைகளும் 
தொடரும் வாயைகள் யாவும் விலகி தானே வெகுதூரம் ஓடிவிடும்..



No comments:

Post a Comment

Mcx Commodity Market 26.02.2018 Updated...Shall i want to SELL today or BUY today..?

ஓம் நமசிவய - சிவவாக்கியர் சொல்லும் அர்த்தம் தான் என்ன..? பாடல் விளக்கம்

பாடல் அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் கரியதோர் எழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷ ...